அஜித்தை விட இரு மடங்கு வரவேற்பு பெற்ற பவன் கல்யாண்
தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த விஜய், அஜித், தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோர் ஏறக்குறைய சமகாலத்தவர்கள், அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள்.
தமிழில் அஜித் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை தெலுங்கில் 'வக்கீல் சாப்' என ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. டிரைலருக்கு பவன் ரசிகர்கள் அமோக வரவேற்பைத் தந்துள்ளார்கள். ஒரு வாரத்திற்குள்ளாகவே 34 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிரைலருக்கு 18 மில்லியன் பார்வைகள் தான் கிடைத்தன. ஆனால், அதைவிட சுமார் இரு மடங்கு வரவேற்பு 'வக்கீல் சாப்' படத்திற்குக் கிடைத்துள்ளது. அஜித்தை விட பவன் கல்யாண் பவர்புல்லாக நடித்துள்ளதாக தெலுங்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வரும் ஏப்ரல் 9ம் தேதி 'வக்கீல் சாப்' படம் வெளியாகிறது.