தமிழுக்கு வரும் ஹிந்தி நடிகர்
ADDED : 6 hours ago
தங்கல், ஸ்த்ரீ, பதி பத்னி அவுர் வோ, ஸ்த்ரீ 2 போன்ற புகழ்பெற்ற ஹிந்தி படங்களில் நடித்தவர் அபர்ஷக்தி குரானா. ஜூபிலி என்ற வெப் தொடரில் நாயகனாக நடித்தார். இவர் தற்போது 'ரூட்: ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். மேலும் இந்தப் படத்தில் கவுதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி குரானா, நரேன், பவ்யா திரிகா, பாவ்னி ரெட்டி, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரிய பிரதாப் இயக்குகிறார். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். அரன் ரே இசை அமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சாதாரண மனிதன் அல்ல, மரணத்தை வெறுப்பவர் என்கிற ரோலில் நடித்துள்ளார்.