தீவிரமாக ஆன்மிகத்தில் இறங்கிய அமலாபால்
ADDED : 1682 days ago
சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்த அமலாபால், அதன்பிறகு மைனா படத்தில் இருந்து தனது இமேஜை மாற்றிக் கொண்டவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மீண்டும் சர்ச்சைக்குரிய நடிகையானார். இப்போது படங்களுடன் வெப்சீரிஸிலும் அதிக ஆர்வமாய் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோஷுட்டுகளை அவ்வப்போது வெளியிடுவார்.
இந்தநிலையில் சமீபகாலமாக காவி உடையணிந்து ஆன்மிக பயணம் செல்லும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் அமலாபால், தற்போது தான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ள போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து அமலாபால் சன்னியாசியாக மாறி விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.