உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியின் ஆச்சார்யா தள்ளிப்போகிறது

சிரஞ்சீவியின் ஆச்சார்யா தள்ளிப்போகிறது

கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால், ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வரும் படம் ஆச்சார்யா. இந்த படத்தை வருகிற மே 13-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஆச்சார்யா ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் பாலகிருஷ்ணாவின் பிபி-3 என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகும் பவன் கல்யாணின் வக்கீல் சாப், ஏப்ரல் 16-ந்தேதி வெளியாகவுள்ள நாகசைதன்யாவின் லவ் ஸ்டோரி போன்ற படங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே தேதியில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !