மீண்டும் நாகசைதன்யாவுடன் இணைந்த ராஷி கண்ணா
ADDED : 1612 days ago
சங்கத்தமிழன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, அரண்மனை-3, மேதாவி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் ஏற்கனவே நாகசைதன்யாவுடன் வெங்கிமாமா என்ற படத்தில் நடித்துள்ளவர், தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது சேகர் கம்முலாவின் லவ்ஸ்டோரி படத்தில் நடித்து முடித்து விட்டு, ஹிந்தியில் அமீர்கானுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர் நாகசைதன்யா விரைவில் ராசிகண்ணாவுடன் புதிய படத்தில் இணையப்போகிறார்.