7 மொழிகளில் வெளியாகும் உபேந்திராவின் கப்ஜா
ADDED : 1658 days ago
கன்னட சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனது ரசிகர் வட்டாரத்தை எங்கும் நகரவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் உபேந்திரா. தற்போது சந்துரு என்பவர் இயக்கத்தில் கப்ஜா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கிச்சா சுதீப்பும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
1946-லிருந்து 1984ஆம் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதையாக இது உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்காக ஐதராபாத், மும்பை, பாண்டிச்சேரி, பெங்களூர் என நாற்பது நகரங்களில் பிரத்யேகமான செட்டுகள் அமைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். அந்தவகையில் இந்தப்படம் பான் இந்தியா படமாக ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தி, ஓடியா மற்றும் மராத்தி என 7 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம்.