எனக்கு கொரோனா இல்லை - ராதிகா
ADDED : 1688 days ago
கொரோனா தொற்று தீவிரமாகி வரும் வேளையில் நடிகை ராதிகாவும் இந்நோய் தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வந்தன. செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை அவர் மறுத்துள்ளார் ராதிகா. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா பிரச்னை இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு பின் லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்து பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம். மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.