உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட்

முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

தற்போது கையில் மிகப்பெரிய கத்தியுடன் வேட்டி கட்டிய சூர்யா நடந்து செல்வது போல சில் அவுட்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஒன்றுகொன்று மாறுபட்ட இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி புதிதாக ஒரு விஷயத்தை முயற்சித்து பார்க்கிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !