மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும்
ADDED : 1640 days ago
தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட முடியாது என்பதாலோ என்னவோ, சோசியல் மீடியாவில் தனது விதவிதமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் மாளவிகா.
அந்தவகையில் தற்போது ஜீன்ஸ் பனியன் அணிந்து பைக்கிள் சவாரி செய்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் “வெள்ளிக்கிழமை என்றாலே பைக் சவாரி தான்.. என்பீல்டு லவர் பார் லைப்' என்றும் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா