உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், லீலா சாம்சன்

அந்தகனில் இணைந்த வனிதா விஜயகுமார், லீலா சாம்சன்

பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் மீடியா வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார். மூன்றாவது திருமண சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்துள்ள நிலையில், சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கெடுத்து வரும் வனிதாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா விஜயகுமார். இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார்.

இதேப்போன்று இப்படத்தில் மற்றுமொரு முக்கிய வேடத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞரும், சமீபகாலமாக நடிப்பிலும் களமிறங்கி உள்ள லீலா சாம்சன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !