டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை
பெண் இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த வாரம் வெளியானது. அந்த வீடியோவில் யஷ் மற்றும் பிரேசில் நாட்டின் மாடல் மற்றும் நடிகையான பீட்ரிஸ் டாவென்பாக் என்பவரும் நடித்திருந்தனர். இருவருக்குமிடையேயான ஆபாசக் கோணங்களில் படமாக்கப்பட்ட படுக்கையறை காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ, 'ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான' வீடியோ என கர்நாடகா மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தணிக்கை வாரியமும் அந்த வீடியோ குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த வீடியோ குறித்து எழுந்துள்ள கடும் சர்ச்சை காரணமாக அதில் நடித்த பிரேசில் நடிகை பீட்ரிஸ், இன்ஸ்டாகிராம் தளத்தை தற்போது 'டீஆக்டிவேட்' செய்துள்ளார். அவருடைய தளத்திற்குச் சென்று பலரும் எதிர்ப்பு கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.