உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா

ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா

பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் மகாபாரதம் புகழ் சதீஷ் கவுல் கொரோனாவுக்கு பலியானார். இதை தொடர்ந்து பாலிவுட் சின்னத்திரை நடிகைகள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பிறகு தான் அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டனர். தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !