காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ரஜினி
ADDED : 1634 days ago
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாள திரையுலகை விட தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான பாவ கதைகள் மற்றும் புத்தம் புது காலை ஆகிய ஆந்தாலாஜி படங்களில் அவரது நடிப்பு அனைவரிடமும் பாராட்டு பெற்றது. இந்தநிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் மலையாள பதிப்புக்கு ரஜினி' என டைட்டில் வைத்துள்ளார்கள்.. தமிழில் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. வினில் வர்கீஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.