உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் டாக்டர். இந்த படம் மார்ச் 23-ந்தேதியே வெளியாக இருந்தது. ஆனால் தேர்தல் வந்ததால் ரம்ஜான் அன்று வெளியிடப்போவதாக சொன்னார்கள்.

அதையடுத்து தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே இருக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ரம்ஜானுக்கு ஷோலோக வந்து வசூல் செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் இப்போது ரம்ஜான் ரிலீசில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவனும் இணைந்திருக்கிறது. என்றாலும் இந்தமுறை பின்வாங்கவில்லை சிவகார்த்திகேயன். அதனால் ரம்ஜான் அன்று சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது உறுதியாகியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !