நடிகர் விவேக் மறைவு : ராஜ்கிரண் உருக்கமான கவிதை
நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணும் விவேக்கின் மரணம் குறித்து ஒரு உருக்கமான கவிதை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தம்பி விவேக்
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்தபோதெல்லாம் அன்பைத் தேடிப் போனாய், அறிவைத் தேடிப் போனாய், பண்பைத் தேடிப் போனாய் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போது தாயைத் தேடிப் போனாயோ
தனயனைத் தேடிப் போனாயோ
யாரை நம்பி போனாயோ
எதையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை
மனம் தவிக்கிறது...
எதை நினைத்த என் மனதை
தேற்றிக்கொள்ள
முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது...
இவ்வாறு கவிதை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.