சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவர் கொரோனாவால் மரணம்
ADDED : 1675 days ago
வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை, திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதுடன், பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்படி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துவந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பும், படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த சிரஞ்சீவியின் கேரவன் ஓட்டுனர் இன்று மரணம் அடைந்தார்.. இது சிரஞ்சீவி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மகன் ராம்சரண் இருவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக ஆச்சார்யா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா படக்குழுவினர் அனைவரும் முதலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிலைமை சரியான பின் படப்பிடிப்பை துவங்கி கொள்ளலாம் என்றும் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டுள்ளார். .