வெற்றிமாறனின் விடுதலை- போஸ்டரை வெளியிட்ட விஜயசேதுபதி
ADDED : 1628 days ago
அசுரன் படத்தை அடுத்து சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். விஜயசேதுபதியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜயசேதுபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் சூரிபோலீஸ் வேடத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். அதோடு, வாத்தியாராக விஜயசேதுபதி, கதை நாயகனாக சூரிஎன்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.