13 மில்லியன் மைல்கல்லை கடந்த பூஜா ஹெக்டே
ADDED : 1672 days ago
2021ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தவர் தறபோது டோலிவுட்டின் நம்பர்ஒன் நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், 9 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் விஜய்-65ஆவது படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தனது படங்கள் சம்பந்தப்படட தகவல்களை ரசிகர்களுடன் தவறாமல் பகிர்ந்து கொண்டும் வருகிறார். இதனால் அவரை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது அவர் 13.2 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, தேங்க்யூ மை லவ்லீஸ். நீங்கள் அனைவரும் மெல்லியை அரவணைப்புகளை அனுப்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.