விவேக் நினைவாக போலீசாருடன் இணைந்து மரக்கன்று நட்ட ரம்யா பாண்டியன்
ADDED : 1672 days ago
நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் அவரின் 1 கோடி மரக்கன்று நடும் பணியை இப்போதும் பலரும் முன்னெடுத்துள்ளனர். திரைப்பிரபலங்கள் உடன் பல்வேறு தன்னார்வலர்களும், பொதுமக்களும் அவர் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் மறைவை யொட்டி அவர் நினைவாக அவரது வயதான 59ஐ குறிக்கும் வகையில் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 59 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்வில் போலீசாருடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியனும் மரக்கன்றுகளை நட்டார்.