பிரசாந்த் படத்தில் இணைந்த கார்த்திக்
ADDED : 1627 days ago
ஹிந்தியில் ஹிட் அடித்து, தேசிய விருதுகளை வென்ற ‛அந்தாதூன்' படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக் ஆகிறது. தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிரசாந்த், பிரியா ஆனந்த் சிம்ரன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பில் தற்போது நடிகர் கார்த்திக் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்னையால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் பிரசாந்த் நடிக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார். பிரசாந்த், சிம்ரன், தியாகராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.