எனிமி படப்பிடிப்பை முடித்தார் ஆர்யா
ADDED : 1672 days ago
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவன் இவன் படத்திற்கு பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இதில் ஆர்யா வில்லனாக நடித்திருக்கிறார். சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் நடித்த மம்தா மோகன்தாஸ் நாயகியாக நடித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை உருவான பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 23ஆம் தேதியோடு ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அதையடுத்து கேக் வெட்டி கொண்டாடி விட்டு எனிமி யூனிட்டுக்கு விடைகொடுத்துள்ள ஆர்யா தனது டுவிட்டரில், விஷால், ஆனநத் சங்கர் உள்பட எனிமி படக்குழுவுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.