அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் புதிய மாற்றம்
ADDED : 1625 days ago
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும், கோஷியும் படம் தெலுங்கில் பவன்கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் பவன்கல்யாண் போலீசாகவும், ராணா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். சாகர் சந்திரா இயக்கும் இப்படத்தில் திரிவிக்ரம் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இப்படத்தின் திரைக்கதையில் ஒரு மாற்றம் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், அய்யப்பனும் கோஷியும் மலையாள பதிப்பில் இல்லாத ஒரு புதிய பிளாஷ்பேக் எபிசோட் தெலுங்கு ரீமேக்கில் இடம்பெறுகிறது. இந்த பகுதி படத்தின் முக்கிய அம்சத்தை உருவாக்கும். இது மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.