சசிகுமாருக்கு வில்லனாக மாறும் அப்பானி சரத்
ADDED : 1624 days ago
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற 'அங்கமாலி டைரீஸ்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அப்பானி சரத். அந்தப்படம் கொடுத்த நல்ல அறிமுகம் காரணமாக தமிழில் விஷாலின் சண்டக்கோழி-2, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் துணை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இடையில் ஆட்டோ சங்கர் கதையை மையமாக வைத்து உருவான வெப் சீரிஸிலும் நடித்த இவர், தமிழில் நெல்லு என்கிற படத்திலும் சத்தமில்லாமல் ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார். இந்தநிலையில் கழுகு சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அப்பானி சரத். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.