‛அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனி பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : 1670 days ago
‛உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தொடர்ந்து நாடோடிகள் படம் மூலம் பிரபலமான இவர், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் இன்று(ஏப்., 26) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரகனியின் பிறந்தநாளை பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.