ஓங்கி அறைவேன் : சித்தார்த் டுவீட்டால் சலசலப்பு
ADDED : 1719 days ago
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் அவதிப்படுவதுடன் இதனால் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. மருத்துவமனைகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டி தனது டுவிட்டரில், ‛‛ஒழுக்கமான மனிதரோ, புனிதரோ அல்லது தலைவரோ.... பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் கன்னத்தில் அறை விழும் என பதிவிட்டுள்ளார் சித்தார்த். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.