பவித்ராவுக்கு அடுத்தப்பட வாய்ப்பு
ADDED : 1668 days ago
சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. விளம்பரம், மாடலிங்கிலும் அசத்தி வரும் இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் நிறைய தேடி வருகின்றன. ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்து நடிகர் கதிருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக் படமாக உருவாகும் இதை புதுமுகம் ஒருவர் இயக்குகிறார். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.