உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2022 கோடை விடுமுறையில் 'ஆர்ஆர்ஆர்' வெளியீடு?

2022 கோடை விடுமுறையில் 'ஆர்ஆர்ஆர்' வெளியீடு?

ராஜமவுலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.

இப்படத்தை அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் இப்படத்தின் பாதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.

அதனால், படத்தை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி வெளியிட வாய்ப்பில்லை. எனவே, படத்தை அடுத்த வருட கோடை விடுமுறையில் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம்.

'பாகுபலி 2' படம் கூட ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாகி பெரிய வசூலைப் பெற்றது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் அப்படி வெளியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !