அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்கவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1664 days ago
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தில் அவரது தங்கையாக ஒரு பவர்புல் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக கடந்த இரண்டு தினங்களாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். அல்லு அர்ஜூன் படத்தில் நான் நடிக்கவில்லை. அது வதந்தி என்று தனது சார்பில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அவர் தான் தங்கை வேடம் என்றதும் மறுத்து விட்டாராம். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் தங்கையாக நடித்தில் இருந்தே தொடர்ந்து அதுமாதிரியான வேடங்கள் அதிகம் வந்ததால் அவற்றையெல்லாம் தவிர்த்து வந்துள்ளார். அப்படிதான் இந்தபடத்தையும் வேண்டாம் என கூறிவிட்டாராம்.