மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1584 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1584 days ago
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவி சிகிச்சை பிரிவில் உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பாண்டு, ‛‛கரையெல்லாம் செண்பகப்பூ'' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததால் அவர் மூலம் கிடைத்த வாய்ப்பால் சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தனக்கென நடிப்பில் ஒரு பாணியை உருவாக்கி அசத்தி வந்தார். பாட்டுக்கு நான் அடிமை, சின்னத்தம்பி, இது நம்ம பூமி, தெய்வாக்கு, காதல் கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் பின்டு வெள்ளச்சி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். மேலும் கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். முக்கியமாக திமுகவில் இருந்து எம்ஜிஆர்., விலகி அதிமுக., கட்சியை தொடங்கியபோது, அந்தக்கட்சிக்கு கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் மடிந்த திரைப்பிரபலங்கள் வரிசையில் நடிகர் பாண்டுவும் இணைந்துள்ளார்.
1584 days ago
1584 days ago