மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1584 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1584 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
1584 days ago
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குனருமான இப்ராஹிம் காலமானார். ஒரேநாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், தயாரிப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் மறைந்தது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1980ல் வெளியாகி அன்றைய கல்லூரி மாணவர்களை கொண்டாட வைத்த ஒரு படம் ‛ஒரு தலை ராகம்'. டி.ராஜேந்தரின் கதையை படமாக இயக்கி, தயாரித்தார் இப்ராஹிம். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, படத்தில் நடித்தவர்கள் மட்டுமல்லாது சினிமாவில் டி.ராஜேந்தர் எனும் பன்முக ஆளுமை கொண்டவரையும் உருவாக்கியது. அதன்பின் சினிமாவில் ஓரிரு படங்களை தயாரித்தார் இப்ராஹிம். இந்நிலையில் உடல்நலக் குறைவால் இன்று(மே 6) இவர் காலமானார்.
சினிமாவில் எத்தனையோ பேர் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் சாதிப்பவர்கள் வெகு சிலரே. இன்னும் சிலர் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு படம் என்றும் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத படமாக ஒரு சிலருக்கு மட்டும் தான் அமையும். அந்தவகையில் ஒரு தலை ராகம் எனும் ஒரு படம் மூலம் இப்ராஹிம் மறக்க முடியாத இயக்குனர், தயாரிப்பாளர் என்றே சொல்லலாம்.
டி.ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல்
1980ல் வெளியான என் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர். என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர். வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர். என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார். இந்த உலகை விட்டு பிரிந்தார். கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
1584 days ago
1584 days ago
1584 days ago