விஜய்க்கு வில்லன் செல்வராகவனா?
ADDED : 1612 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தில் பூஜா ஹெக்டே, விடிவி.கணேஷ், யோகிபாபு நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இயக்குனரும், ‛சாணிக்காயிதம்' படம் மூலம் நடிகராகவும் களமிறங்கி உள்ள செல்வராகவன், ‛விஜய் 65'வது படத்தில் வில்லனாக நடிப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.