உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்கை அமரன் மனைவி காலமானார்

கங்கை அமரன் மனைவி காலமானார்

இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக படைப்பாளியான கங்கை அமரன், மனைவி மணிமேகலை(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். தனது அண்ணன்கள் பாஸ்கர், வரதராஜன், இளையராஜா உடன் இசைக்குழுவில் பயணித்தவர், பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையால் சாதித்தார். தற்போது தணிக்கை குழு உறுப்பினராகவும், பா.ஜ.,வின் ஆதரவாளராகவும் உள்ளார். இவரது மகன்களான மூத்தவர் வெங்கட் பிரபு தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குனராகவும், இளையவர் பிரேம்ஜி இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகின்றனர்.


கங்கை அமரனின் மனைவி மணிமேகலை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

கங்கை அமரன், மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருக்கு திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !