விஜய் 65 : செட் பணிகள் நிறுத்தம்
ADDED : 1610 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் விஜய் 65வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்டமாக சென்னையில் தொடங்க திட்டமிட்டனர்.அதற்காக ஒரு பிரமாண்டமான மால் செட் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால், செட் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த பணிகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகே மறுபடியும் விஜய் 65வது படத்திற்கான செட் பணிகள் தொடங்கப்பட்டு அதன்பிறகே இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.