உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விபீஷணனாக நடிக்கிறேனா.? - கிச்சா சுதீப் மழுப்பல் பதில்

விபீஷணனாக நடிக்கிறேனா.? - கிச்சா சுதீப் மழுப்பல் பதில்

கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்து விட்டாலும், மற்ற மொழி படங்களில் இருந்து வரும் முக்கிய வேடங்களையும் நடிகர் கிச்சா சுதீப் மறுப்பதில்லை. இதற்குமுன் பாகுபலி, சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சுதீப், அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் விபீஷணனாக நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது.

அதிகாரபூர்வமாக இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில், இந்தப்படத்தில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மழுப்பலாக பதிலளித்துள்ளார் கிச்சா சுதீப். இதுபற்றி அவர் கூறும்போது, “ஆதிபுருஷ் படக்குழுவினர் எனது மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். ஆனால் நான் இன்னும் அவர்களை சந்தித்து பேசவில்லை. பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் இதில் நடிக்கிறேனா என்பது பற்றி இப்போது என்னால் சொல்ல முடியாது” என கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !