உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபு படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் என்ன

மகேஷ்பாபு படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் என்ன

தற்போது தமிழில் அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். பரசுராம் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் மகேஷ்பாபு ஒரு வங்கி மேலாளராக நடிப்பதாகவும், அவருக்கு கீழ் பணியாற்றும் ஒரு வங்கி அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !