ஷங்கர் - ராம்சரண் படத்தில் கொரியன் நடிகை
ADDED : 1709 days ago
இந்தியன் 2 பஞ்சாயத்துக்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அந்நியன் ஹிந்தி ரீமேக் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகும் படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களை அறிவித்து விட்ட ஷங்கர், அதுதொடர்பான பணியிலும் இறங்கி உள்ளார். இதில் ராம்சரண் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் ராம்சரணின் தந்தையான நடிகர் சிரஞ்சீவியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியன்-2வில் நடிப்பதாக கூறப்பட்ட கொரியன் நடிகை பே சூசி என்பவர் நடிப்பதாக தற்போது டோலிவுடடில் ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இவர் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்கிறாரா இல்லை முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பதை தெரியவில்லை. இந்த சுஷீபே கொரியன் மொழியில் படங்கள், சீரியல், மாடலாகவும் செயல்பட்டு வருகிறார்.