மீண்டும் உடல் எடை அதிகரித்த அனுஷ்கா
ADDED : 1709 days ago
நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் மகேஷ்.பி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அனுஷ்கா. இந்த படத்தில் நவீன் பொலிஷிட்டி நாயகனாக நடிக்கிறார். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். அவர் எடை அதிகரித்த போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. ஜீரோ சைஸ் படத்திற்காக எடையை அதிகரித்த அனுஷ்கா, அதன்பின் கஷ்டப்பட்டு எடையை குறைத்தார். இப்போது மீண்டும் அதுபோன்று உடல் எடை பெருத்து காணப்படுகிறார். ஓராண்டுக்கு மேல் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வருவதால் அனுஷ்காவின் எடை இந்தளவுக்கு பெருத்துவிட்டதாம்.