ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை
ADDED : 1598 days ago
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழி படங்களில் ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிவித்தார். இந்நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுப்பற்றி, ‛‛கடவுள் அருளால் இன்று(மே 22) எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு முன் இப்படி ஒரு உணர்வை அனுபவதித்தது இல்லை. ஒட்டுமொத்த குடும்பமும் மகழ்ச்சியில் உள்ளது. உங்களின் அளவுக்கடந்த ஆசீர்வாதத்திற்கு நன்றி'' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்