வலிமை தள்ளிபோகிறது
ADDED : 1643 days ago
வினோத் - அஜித் மீண்டும் கூட்டணி அமைத்த வலிமை படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது. வெளிநாடுகளில் படம்பிடிக்க எண்ணினர். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வர, இங்கேயே படமாக்கலாம் என எண்ணியிருந்தனர். ஆனால் இப்போது அதுவும் கொரோனாவால் படமாக்க முடியாமல் உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இதுவரை வெளியாகவில்லை. இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு நச்சரித்தார்கள் என அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வரும் ஆக., 15ல் இப்படம் ரிலீஸாவதாக இருந்தது. தற்போதுள்ள சூழலில் படம் முடியாததால் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.