உங்கள் கண்ணீரை ஏற்கிறேன் பிரதமரே - கங்கனா
ADDED : 1701 days ago
முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். அப்போது கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண் கலங்கினார். இதை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, ‛‛கண்ணீர் உண்மையோ, போலியோ உணர்வுகளின் வலியை அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டு பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிலர் இதிலும் பிரச்னை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு கண்ணீர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்கிறேன். அன்புள்ள இந்தியர்களே உங்கள் அணுகுமுறையையும், பார்வையையும் சரியாக தேர்ந்தெடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.