உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா - அம்மா பிரிந்தது மகிழ்ச்சியே : ஸ்ருதிஹாசன்

அப்பா - அம்மா பிரிந்தது மகிழ்ச்சியே : ஸ்ருதிஹாசன்

என் அப்பா - அம்மா விவாகரத்து பெற்று பிரிந்தது எனக்கு மகிழ்ச்சி தான் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர தம்பதியர் கமல்ஹாசன் - சரிஹா. 1988ல் திருமணம் செய்த இவர்கள் கடந்த 2004ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : இணைந்து வாழ முடியாது என அப்பா - அம்மா இருவரும் முடிவெடுத்த பின் ஏதோ ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ முடியாது. அந்தவகையில் அவர்கள் வாழ நினைத்த வாழ்க்கைக்காக பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியை தான் தந்தது. அதேசமயம் எனக்கும், என் தங்கைக்கும் நல்ல பெற்றோர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. ஆனால் தற்போது அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !