உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா பாதிப்பு : மீனவ குடும்பங்களுக்கு உதவும் தர்ஷா குப்தா

கொரோனா பாதிப்பு : மீனவ குடும்பங்களுக்கு உதவும் தர்ஷா குப்தா

விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது சமூக சேவையிலும் பிசியாகி இருக்கிறார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற உதவி பணிகளை செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

ராயபுரத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உள்ளார். என்னால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளேன் மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் செய்து மக்களின் துயர் துடைக்க என்னால் இயன்ற பணிகளை செய்வேன். என்கிறார் தர்ஷா குப்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !