சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
ADDED : 1592 days ago
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. 2021-2023ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சின்னத்திரை தொடர்பாக சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர்கள் வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்க தகுதி உடையவர்கள் 20 பேர்.
நேற்று நடந்த தேர்தலில் 15 பேர் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரும் கீழ்கண்ட நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: கே.உதயம்
செயலாளர்: வி.பி.தமிழ்பாரதி
பொருளாளர்: ராஜ வெங்கய்யா
துணை தலைவர்கள்: டி.நேமிராஜ், முருகன் விஜய்
இணை செயலாளர்கள்: குமரசேன், ஏ.கஜபதி