போட்டோ சூட் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே
ADDED : 1589 days ago
தற்போது விஜய்-65 மற்றும் ராதே ஷியாம், ஆச்சார்யா, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. லாக்டவுன் காலத்தில் அவர் மும்பையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் தனது போட்டோ கிராபர் ராகுல் ஜாங்கியானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள பூஜா ஹெக்டே, அவர் தனக்கு போட்டோ சூட் நடத்தியபோது எடுத்துக் கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். உண்மையில் இந்த படப்பிடிப்பை நடத்துவதற்கு திட்டமிட்டதை விட நீண்டநேரம் பிடித்தது. ஆனாலும் அந்த சூட் ஜாலியாக நடைபெற்றது என்றும் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.