என் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யாதீர்கள் : துல்கர்
ADDED : 1586 days ago
மலையாளத்தின் இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாள நடிகர்களில் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். இதை பயன்படுத்தி அவரது பெயரில் ஏராளமான முகநூல் பக்கங்கள், டுவிட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த போலி கணக்குகள் சிலவற்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், அது நல்லது இல்லை என்று கூறியுள்ளார்.