ஆண்கள் ஸ்டைலில் தலைமுடியை மாற்றிய கனிகா
ADDED : 1593 days ago
பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் என பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை கனிகா. திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் விக்ரமின் கோப்ரா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், சமயங்களில் கவர்ச்சியான படங்களை கூட பதிவிட்டுள்ளார். கடந்தவாரம் கைலி, பனியன் அணிந்த போட்டோவை பகிர்ந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆண்களைப் போன்று தனது தலைமுடியை மாற்றி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். ‛‛ஒரு திரைப்படத்திற்காக இப்படி டெஸ்ட் சூட் எடுத்துள்ளேன்'' என பதிவிட்டுள்ளார்.