ஒரே தளத்தில் வெளியாகும் கசட தபற, விக்டிம்
ADDED : 1698 days ago
சிம்பு தேவன் இயக்கி உள்ள அந்தாலஜி வகை படம் கசட தபற. 6 பகுதிகளை கொண்ட படத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
2019ம் ஆண்டிலேயே இது தயாராகிவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் இதன் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெங்கட்பிரபு தயாரித்துள்ளார்.
இதேபோல வெங்கட் பிரபு தயாரித்துள்ள அந்தாலஜி படம் விக்டிம். இதில் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், ராஜேஷ், ரஞ்சித் ஆகியோர் ஆளுக்கொரு கதையை இயக்கியுள்ளனர். இரண்டுமே சோனி லைவ் ஓடிடி நிறுவனத்தில் நேரடியாக வெளியாகிறது.