2020ல் முதலிடம் பிடித்த ஸ்ருதிஹாசன்
ADDED : 1593 days ago
பிரபல பத்திரிகை கடந்த 2020 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர் - நடிகை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் வரிசையில் விஜய் தேவரகொண்டாவும், நடிகைகள் வரிசையில் ஸ்ருதிஹாசனும் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஸ்ருதிஹாசனைப் பொறுத்தவரை 2017ல் இருந்து 2020 வரை எந்த தெலுங்கு படங்களிலும் நடிக்கவில்லை. 2021ல்தான் கிராக், வக்கீல்சாப் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் ஸ்ருதிஹாசனையே 2020ல் அதிகம் விரும்பத்தக்க பெண்ணாக அறிவித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை சமந்தா, பூஜா ஹெக்டே, ரகுல் பிரீத் சிங், ராஷ்மிகா, அதிதிராவ், தான்யா ஹோப், நிதி அகர்வால், காஜல் அகர்வால், ராஷி கண்ணா ஆகியோர் பிடித்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.