சிம்பு படம் : இரண்டு பாடல்களை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : 1593 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடித்த சில் லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கி கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முப்தி என்ற கேங்ஸ்டர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, கவுதம் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான இரண்டு பாடல் கம்போஸிங்கை ஏ.ஆர்.ரகுமான் முடித்து விட்டாராம். கொரோனா அலை ஓய்ந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.