பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆதரவு
ADDED : 1581 days ago
ஹிந்தி டிவி நடிகர் பியர்ல் புரி சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கைதானார். இவர் நடிகை யாஷிகாவின் நண்பராம். இதனால் டுவிட்டரில், ‛‛பியர்ல் மிகவும் அன்புடன் பேசி பழகுபவர். உண்மை ஒரு நாள் தெரியவரும், அதுவரை பொறுமையாக இருப்போம். நான் பியர்லுக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் மீண்டு வருவார் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார் யாஷிகா.
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்த யாஷிகாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.